Skip to main content

Sexual orientation and human rights (brochure)

பாலியல் போக்கு என்பதன் கருத்து என்ன?

“பாலியல் போக்கு” என்பது ஒரு தனியாளின் சிறப்பியல்பாகும், அது நீங்கள் யார் என்பதன் ஒரு பகுதியை உருவாக்குகிறது. அது ஒரினச்சேர்க்கைப் பெண்களும் ஒரினச்சேர்க்கை ஆண்களும் முதல் இருபாலினமும் வேற்றுப்பால் கவர்ச்சியும் வரையுள்ள மனித பாலின்ப ஆர்வத்தின் வேறுபாட்டு எல்லைகளை உள்ளடக்குகிறது. 

ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டவிதி, எவ்வகையான பாதுகாப்பை வழங்குகிறது?

ஒன்ராறியோ மனித உரிமைகள் சட்டக் கோவை (The Ontario Human Rights Code ) சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் வழங்குவதுடன் பாகுபாட்டிலிருந்தும் சுதந்திரம் அளிப்பதுடன் ஒன்ராறியோவில் உள்ள ஒவ்வொருவரினதும் கெளரவத்தையும் பெறுமதியையும் அங்கீகரிக்கும் ஒரு சட்டமாகும்.  இந்தச் சட்டக் கோவை, யாரையாவது அவர்களின் பாலியல் போக்குக்காக அல்லது திருமண நிலைக்காக பாகுபடுத்துவதை அல்லது தொந்தரவு செய்வதை சட்டத்துக்கு எதிரானதாக்குகிறது. இது ஒரே பாலின உறவு முறைகளையும் உள்ளடக்குகிறது.

பாகுபாட்டிலிருந்தும் தொந்தரவிலிருந்தும் விலகியிருக்கும் இந்த உரிமை, வேலைவாய்ப்பு, சேவைகளும் வசதிகளும், விசேட இடவசதியும் குடியிருப்பும், தொழிற்சங்க ஒப்பந்தங்களும் அங்கத்துவமும், வர்த்தக அல்லது தொழில் வல்லுனர் அமைப்புக்கள் என்பவற்றுக்குப் பொருந்தும்.   

ஒருவரை, அவனோ அவளோ ஒரினச்சேர்க்கை ஆண் அல்லது பெண், வேற்றுப்பால் கவர்ச்சியுள்ளவர் அல்லது இரு பாலினர், என்ற காரணத்துக்காக இந்தப் பிரிவுகளில் சமமில்லாமல் நடத்த அல்லது தொந்தரவு செய்ய முடியாது. குறிப்பிட்டவர் ஒரே பாலின உறவுமுறையில்  இருக்கிறார் என்பதற்காக பாகுபடுத்துவதும் சட்டத்துக்கு எதிரானது ஆகும்.

குறித்தவரின் பாலியல் போக்கோ அல்லது அது உணரப்படும் விதமோ எப்படி இருந்தாலும் பாலினப் போக்கை அடிப்படையாகக் கொண்ட பாகுபாட்டுக்கு எதிரான சட்டக்கோவைப் பாதுகாப்பின் ஒரு பகுதியாக ஒரினச்சேர்க்கைக்கு எதிரான நடத்தையும் கருத்துரையும் தடுக்கப்பட்டுள்ளன. 

எப்போது தொந்தரவு ஆகும்?

வரவேற்கப்படாது எனத் தெரிந்த அல்லது நிச்சயமாகத் தெரிந்திருக்க வேண்டிய, அவமதிக்கும் அல்லது புண்படுத்தும் கருத்துக்களைச் சொல்லல் அல்லது செயல்களைச் செய்தல் தொந்தரவு ஆகும். சில உதாரணங்கள் ஆவன:

  • “உன் போன்றவர்களுடன் போய் வாழ், ஏனென்றால் நீ இங்கு பொருத்தமாக இருக்க மாட்டாய்”, என ஒரினச்சேர்க்கைப் பெண் குடியிருப்பாளருக்கு   வாடகைக்கு விடுபவர் ஒருவர் சொல்லல்.
  • ஒருவருடைய பாலியல் போக்கு அல்லது ஒரே பால் உறவுமுறை பற்றி ஒரினச்சேர்க்கைக்கு எதிரான பகிடிகள் சொல்லல் அல்லது குறிப்பால் உணர்த்துதல்.
  • அவமதிக்கும் குறியீடுகளை, கேலிச் சித்திரங்களை, கருத்துச் சித்திரங்களை அல்லது சுலோகங்களை காட்சிக்கு வைத்தல்

கருத்துரைகள் அல்லது செயல்கள் குறிப்பாக பாலியல் போக்கைப் பற்றி இல்லாவிட்டாலும் கூட தொந்தரவு நிகழலாம்.

உதாரணம்: ஒரினச் சேர்க்கைக்கு எதிரான மனப்பாங்குள்ள சரித்திரத்தைக் கொண்ட ஒரு வேலையிடத்தில். தம்மை ஒரினச்சேர்க்கை ஆண்கள் என இனம்காட்டிக் கொண்ட இரு வேலையாட்கள் மட்டும் மீண்டும் மீண்டும் கேலிகளுக்கும் நடைமுறை பகிடிகளுக்கும் இலக்காவார்கள்.  கடந்த காலங்களில், மற்றைய ஒரினச்சேர்க்கை ஆண் வேலையாட்கள் இதே நடத்து முறையால் வேலையை விட்டுச் சென்றிருக்கிறார்கள். எவரும் அவர்களை ஒரினச் சேர்க்கை ஆண்கள் என்று நேரடியாகக் குறிப்பிடா விட்டாலும் கூட, சூழலை அடிப்படையாகக் கொண்டு, மீதியாய் உள்ள தம்மை இனம் கண்டு கொண்ட வேலையாட்கள் தமது பாலியல் போக்கின் அடிப்படையில் தாம் தொந்தரவுக்கு உட்படுவதாக விவாதிக்கலாம்.

சட்டத்துக்கு எதிராக இருப்பதற்கு, எப்போதும் பொருத்தமில்லாத நடத்தை மீள மீள நடக்க வேண்டும் என்றில்லை. ஒரு தனிச் சம்பவமே பாரதூரமானதாக இருப்பதற்குப் போதுமானதாக இருக்கலாம்.  

சில சூழல்களில் ஒரினச்சேர்க்கைக்கு எதிரான கருத்துரைகள் வழமையானதாக இருக்கலாம், அத்துடன் அங்கு இருக்கும் எல்லோருமே வேறுபால் கவர்ச்சி கொண்டவர்கள் என ஆட்கள் அனுமானிக்கலாம். ஆனால் அனேகமாக இது வழக்கமானதல்ல, அது சரியான ஒரினச்சேர்க்கை ஆணைக் காட்டுறது (“that’s so gay” ) மாதிரியான கருத்துரைகள் தங்களுக்கு வேறுபட்ட பாலினப் போக்கு இருக்கிறது என்பதை வெளிக்காட்டாத ஆட்களுக்கு புண்படுத்தலையும் மனத் தகைப்பையும் கொடுக்கலாம்.

வேலைவழங்குபவர்களும் குடியிருப்பு வழங்குபவர்களும் சேவை வழங்குபவர்களும் ஏனையோரும் தங்களுடைய சூழலும் சேவைகளும் பாகுபாட்டிலிருந்தும் தொந்தரவிலிருந்தும் விடுபட்டவையாக இருப்பதை கட்டாயமாக உறுதி செய்து கொள்ளவேண்டும். பாலியல் போக்கை அல்லது ஒரு ஒரே பால் உறவுமுறையை அடிப்படையாகக் கொண்ட தொந்தரவு நடத்தையை அவர்கள் அறிந்திருந்தால் அல்லது அறிந்திருக்க வேண்டும் என்றால் அதற்கு கட்டாயமாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். எவருமே முறையிடாவிட்டாலும் கூட ஒரினச்சேர்க்கைக்கு எதிரான மொழியை அனுமதியாமையை இந்த நடவடிக்கை உள்ளடக்குகிறது.

எப்போது அது பாகுபாடு?

பாலியல் போக்குக்காக அல்லது ஒரே பால் உறவுமுறைக்காக ஒருவர் சமனற்ற முறையில் அல்லது வேறுவிதமாக நடத்தப்படும் போதும் அதனால் அவருக்கு பிரதிகூலம் விளைவாகும் போதும் பாகுபாடு நிகழ்கிறது. பாலியல் போக்குக்காக பாகுபடுத்தச் சொல்லி மற்றவர்களுக்குச் சொல்வதும் சட்டத்துக்கு எதிரானதாகும்.  ஒருவருடைய நடத்தையால் அல்லது ஒரு நிறுவனத்தின் விதிகளாலும் கொள்கைகளாலும் பாகுபாடு விளையலாம்.

உதாரணம்: பாலியல் போக்கு அல்லது ஒரே பால் உறவுமுறையின் காரணத்தால் ஒரு வேலையாளருக்கு பதவி உயர்வு, பயிற்சி மறுக்கப்படல் அல்லது அவரை வேலையை விட்டு நீக்கல்

உதாரணம்: ஒரு நிறுவனத்தின் மருத்துவக் காப்புறுதித்திட்டம் எதிர்ப்பால் துணைவரின் தேவைகளை உள்ளடக்கும், ஆனால் அதே பால் துணைவரின் தேவைகளை உள்ளடக்காது.  

சேவைவழங்குபவர்களும் வாடிக்கைக்காரரும், எப்படித் தான் தாம் அதைக் கருதினாலும் ஆட்களுடைய பாலியல் போக்கினைக் காரணமாக்கி அவர்களுக்கு சேவைகளை மறுக்க முடியாது.

உதாரணம்:  தனது ஏனைய வாடிக்கைக்காரர்களுக்கு, ஒரே பால் சோடிகள் அங்கிருப்பது பிடிக்காது என அந்த முதலாளி நினைப்பதால் ஒரு உணவகம் அவர்களுக்கு சாப்பாடு வழங்க மாட்டாது.

தொந்தரவு வன்முறைக்கு வழிவகுக்கலாம்

பொதுவாக, மெளனமாயிருத்தல் அல்லது எதுவும் செய்யாமலிருத்தல் தொந்தரவு இல்லாமல் போக வழி செய்யமாட்டாது, அத்துடன் சிலவேளைகளில் அவ்வகையான நடத்தை வன்முறைக்கு வழிவகுக்கலாம். நீங்கள் அசெளகரியத்தை உணர்ந்தால் அல்லது மிரட்டப்பட்டால் அதைப்பற்றி அதிகாரத்தில் உள்ள ஒருவருடன் ( ஒரு மேற்பார்வையாளர், கடைச் சொந்தக்காரர் போன்றோர்) கதையுங்கள். 

இப்போது மனு என அழைக்கப்படும், ஒரு முறையீட்டைத் தாக்கல் செய்ய ஒன்ராறியோ மனித உரிமைகள் இணக்கமன்றை (Human Rights Tribunal of Ontario) நீங்கள் தொடர்பு கொள்ளலாம். தொந்தரவு தரும் நடத்தை, அபாயத்தில் இருப்பதாக உங்களை உணரப் பண்ணினால் அல்லது வன்முறைக்கு வழி வகுத்தால் காவல்துறையினரை அழையுங்கள்.

மேலும் தகவல்களுக்கு

ஒன்ராறியோ மனித உரிமைகள் ஆணைக்குழுவின் (The Ontario Human Rights Commission), பாலியல் போக்கால் பாகுபாடும் தொந்தரவும் பற்றிய கொள்கை, போன்ற ஏனைய வெளியீடுகள் www.ohrc.on.ca என்ற இணையத்தளத்தில் கிடைக்கும்.

மனித உரிமைகள் பற்றிய முறையீடு செய்ய – மனுப் போட – ஒன்ராறியோவின் மனித உரிமைகள் இணக்கமன்றைத் (Human Rights Tribunal of Ontario) தொடர்பு கொள்ள –
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-598-0322
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி  (TTY Toll Free):
1-866-607-1240
இணையத்தளம் (Website): www.hrto.ca

உங்களுக்கு சட்ட உதவி தேவையாயின் மனித உரிமைகள் சட்ட ஆதார நிலையத்தை (Human Rights Legal Support Centre) தொடர்பு கொள்ள:
கட்டணமற்ற தொலைபேசி (Toll Free): 1-866-625-5179
செவிப்புலனற்றோருக்கான கட்டணமற்ற தொலைபேசி  (TTY Toll Free):
1-866-612-8627
இணையத்தளம் (Website): www.hrlsc.on.ca 

ISBN/ISSN
PRINT: 978-1-4435-7587-4 | HTML: 978-1-4435-7588-1 | PDF: 978-1-4435-7589-8
Attachments

Attachments